40 வருடங்களாக சீரமைக்கப்படாது இருக்கும் பிராமணவோடை வீதியை சீரமைக்கக் கோரிக்கை!

கோப்பாய் வடக்கு பிராமணவோடை வீதி கடந்த 40 வருடங்களுக்கு மேலாக திருத்தி அமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுகின்றது என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பாடசாலை மாணவர்கள் பொதுமக்கள் பெருமளவில் பயன்படுத்தும் இந்த வீதி திருத்தி அமைக்கப்படாது இருப்பதால் வீதியைப் பயன்படுத்துவோர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர். வீதியை திருத்தி அமைக்குமாறு பொது அமைப்புக்கள் பல தடைவகள் கோரப்பட்டது. எனினும் வீதி திருத்தி அமைக்கப்படவில்லை.
பருத்தித்துறை முதன்மை வீதியில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் பிராமணவோடை வீதியை வலி.கிழக்கு பிரதேச சபை முன்னுரிமை அடிப்படையில் திருத்தி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனர்.
Related posts:
ஆடிச் செவ்வாயால் ஒத்திவைக்கப்பட்ட வடமாகாண சபை!
பாரிய நெருக்கடியில் நிதி மோசடி விசாரணை பிரிவு!
நிறுத்தப்பட்ட விநியோகம் - ஒப்புக் கொண்ட அமைச்சர் !
|
|