325 ஹெக்ரேயர் நிலத்தில் சின்ன வெங்காயச் செய்கை!

Sunday, January 8th, 2017

யாழ்.குடாநாட்டில் 325 ஹெக்ரேயர் நிலப்பரப்பில் விவசாயிகள் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய காலநிலையைப் பயன்படுத்தி அதிகமான விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அநேகமான இடங்களில் பயிரிடப்பட்ட வெங்காயப் பயிர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளன. நீர்வேலி, கோப்பாய், உரும்பிராய், ஊரேழு, புன்னாலைக்கட்டுவான் அச்சுவேலி, சிறுபிட்டி, மாசிவன், நவக்கிரி போன்ற இடங்களில் கூடுதலான விவசாயிகள் காலபோக வெங்காயச் செய்கையில் ஈடுபட்டுள்ளனர் என்று விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

தற்போதைய காலநிலை வேறுபாடு, மழை வீழ்ச்சி இன்மையைப் பயன்படுத்தி விவசாயிகள் வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதேவேளை, குடாநாட்டில் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் கிலோ 100 ரூபாவாக விற்கப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 120 ரூபாவாக அதிகரித்துள்ளது.

small onion

Related posts: