2017ஐ  வாசிப்பு ஆண்டாக மாற்றத்திட்டம்!

Tuesday, December 20th, 2016

2017ஆம் ஆண்டை வாசிப்பு வருடமாக்கி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறன்து என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வாசிப்புப்பழக்கம் அருகி வருகின்றது. இதனால் எமது சந்ததியினர் பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளத் தவறி விடுகின்றனர். மாணவர்கள் மட்டத்தில் இருந்தே வாசிப்பு ஆற்றலை உட்புகுத்த முடியும். தேடல் என்பது மாணவர்களுக்கு அவசியமான ஒன்றாகவுள்ளது. வாசிப்பின் ஊடாக பூரண மொழியறிவுள்ளவராக மாணவர்களை – எமது சந்ததியினரை மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கம். இந்த நிலையில் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவாற்றலை பெருக்கும் நோக்குடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

BOOK

Related posts: