150 வீரர்கள் சட்ட ரீதியாக இராஜினாமா!

Monday, December 5th, 2016

தங்கள் சேவையில் கடமை தவறிய முப்படை வீரர்களுக்கு புதிய பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டதை அடுத்து 220 முப்படை வீரர்கள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 220 முப்படை வீரர்களுள் 150 பேர் சட்ட ரீதியில் இராஜினாமா செய்துள்ளனர் என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

சட்டரீதியான இராஜினாமாக்கள் நிறைவடைந்த பின்னர் மற்றையவர்களுக்கும் இராஜினாமா வழங்கி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பொது மன்னிப்பு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.படைப்பிரிவில் இருந்து தப்பியோடியவர்களுக்கும் பொது மன்னிப்பு குறித்த காலப்பகுதிக்குள் வழங்கி வைக்கப்படும் என்றும் பதவி விலக விரும்பும் படைவீரர்களும் தங்களது இராஜினாமாவை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

sri-lanka-marks

Related posts: