12 மணியுடன் பாடசாலைகளை மூடுவதற்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் முடிவு!
Friday, April 29th, 2016
வட மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து மாகாண பாடசாலைகளையும் நண்பகல் 12 மணியுடன் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இவ்வாறு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்படவுள்ளதாக முதலமைச்சர் சேஷல ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
வட மத்திய மாகாணத்தில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவுவதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலமையில் மாணவர்கள் மேலும் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வட மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்த தீர்மானம் நடைமுறைக்கு வராது என்றும் அந்த மாகாண முதலமைச்சர் சேஷல ஜயரட்ண தெரிவித்துள்ளார்.
Related posts:
நீர் கட்டணம் அதிகரிக்காது!
வெங்காயப் பூவுக்கு கிராக்கி கிலோ 200 ரூபாவாக விற்பனை!
இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினம் அனுஸ்டிப்பு!
|
|
|


