100 ஆவது நாளை நெருங்கும் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் !
Friday, June 2nd, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர அரச வேலைவாய்ப்புக் கோரி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வின்றி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது..
வடமாகாண சபையின் 93 ஆவது அமர்வு அண்மையில் இடம்பெற்ற போது மாகாண சபையின் வாயில்களை மூடி முற்றுகைப் போராட்டம் மேற்கொண்டமை தொடர்பாக வடமாகாண அவைத்தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் கண்டனம் வெளியிடப்பட்டிருந்தது.
கடந்த பல நாட்களாகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில் மன விரக்தியின் உச்சத்தில் தான் வடமாகாண சபை முன்பாக இவ்வாறான முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியிருந்தோம். நாங்கள் வடமாகாண முதலமைச்சர், வடமாகாண அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் மீது எந்தவொரு காழ்ப்புணர்வையும் கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவித்தனர்
Related posts:
யாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஆரம்பம்
மரக்கறி வகைகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை – அரசாங்கம்!
நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சிறந்து விளங்கும் சூழல் உ...
|
|
|


