பொலிஸாரை மோதித்தள்ளி தப்பிய நபர்கள் – இரு பொலிஸார் படுகாயம்!

வீதி சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்த பொலிஸார் மீது முகப்பு வெளிச்சமின்றி வந்த மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வல்லை உப்புறோட் சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றது.
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் பணிப்பிற்கு அமைய கடந்த சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலைவரை பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டது.
இதன் ஒரு கட்டமாக வல்லை உப்பு றோட் சந்தியில் நெல்லியடி பொலிஸார் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது அதிகாலை ஒரு மணியளவில் சுமார் பத்து வரையான மோட்டார் சைக்கிள் முகப்பு வெளிச்சமின்றி வந்தன. அவ் மோட்டார் சைக்கிள்களை சமிக்ஞை காட்டி பொலிஸார் மறுத்தபோது மோட்டார் சைக்கிள்களை நிறுத்தாது பொலிஸார் மீது வேகமாக மோதிவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
Related posts:
|
|