ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞரொருவர் யாழில் கைது!
Sunday, December 4th, 2016
யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள கைலாசபிள்ளையார் ஆலயத்தின் அண்மித்த பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞரொருவர் கடந்த வெள்ளிக்கிழமை(02) யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரான இளைஞரிடமிருந்து 3கிராம் 146 மில்லிகிராம் நிறையுடைய ஹெரொயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நின்ற இளைஞரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையினைத் தொடர்ந்தே இந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், விசாரணையினைத் தொடர்ந்து யாழ் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts:
உள்ளூர் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு!
யாழ். மாவட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கு இன்று தடுப்பூசி - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நாளை வழங்கப்படும்...
எரிபொருள் விநியோக ஒப்பந்தத்தில் சினோபெக் நிறுவனம் கைச்சாத்து!
|
|
|


