உடைமைகளைப் பாதுகாப்பது உரிமையாளர்களது பொறுப்பு – மானிப்பாய் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரி ஜெயவீர தெரிவிப்பு!

Thursday, November 24th, 2016

பொதுமக்கள் தங்களது உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் அக்கறையுன் செயற்பட வேண்டும். உரிமையாளர்களே அவர்களது உடைமைகளுக்குப் பொறுப்பானவர்கள்  என மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜெயவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது –

அண்மைக்காலமாக மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளின் முன்பாக நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுப்போவதும், மறுநாள் அவை வேறு பகுதிகளில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வுகளை மானிப்பாய் பகுதிகளில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஓர் அங்கமாக ஒலி பெருக்கி மூலம் உடைமைகளைப் பாதுகாப்பது தொடர்பில் தெளிவுபடுத்தி வருகின்றனர். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.ஜீ.என்.டி. ஜெயவீரவின் ஆலோசனைக்கு அமையவே இவ்வாறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Sl police55445

Related posts: