ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
Friday, May 19th, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம் தொடர்பில் கடந்த ஜனவரி 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பதால் வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 27ம் திகதிக்கு குறித்த வழக்கு விசாரணைகளை ஒத்தி வைத்து ஹம்பாந்தோட்டை நீதவான் மஞ்சுல கருணாரத்ன இன்று(18) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இன்று சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட 39 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிதி நெருக்கடிகளைச் சந்தித்தாலும் பயிற்சி நெறியை நிறுத்தமாட்டோம் - யாழ்.பல்கலை துணைவேந்தர் !
கலைப் பீடத்துக்கான பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த விருதுகள் இடைநிறுத்தம் - யாழ்ப்பாண பல்கலை துணை...
சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த மாணவர்களுக்கு எதிராக உடன் நடவடிக்கை -அதிபர்களுக்கு கல்வி அமைச்சு உத்...
|
|
|


