நிதி நெருக்கடிகளைச் சந்தித்தாலும் பயிற்சி நெறியை நிறுத்தமாட்டோம் – யாழ்.பல்கலை துணைவேந்தர் !

Monday, November 21st, 2016

நிதி நெருக்கடிகளைச் சந்தித்தாலும் மாணவர்களுக்காக பயிற்சிக்கட்டணங்களை அதிகரிப்பதனூடாக டிப்ளோமாப் பயிற்சியை தொடர்ச்சியாக நடத்துவோம் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையத்தில் இதழியல் டிப்ளோமாப் பயிற்சியை நிறைவு செய்த 18 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று முன்தினம் முற்பகல் 10.30 மணிக்கு ஊடக வளங்கள் மற்றும் பயிற்சிமைய மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் நோர்வே அரசினுடைய உதவியுடன் சிறப்பாக நடைபெற்ற டிப்ளோமாப் பயிற்சி அவர்களின் நிதி முடிவடைந்த காரணத்தால் தொடர்ச்சியாக நடத்த முடியாத நிலைக்கு தடைப்பட்டுள்ளது.

இருந்தாலும் இந்தப் பயிற்சியை பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக நடத்தும், பயிற்சிக்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டு பயிற்சி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை எதிர்காலத்தில் டிப்ளோமாப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

vasanthi

Related posts: