ஹட்டனில் ஆணின் சடலம் மீட்பு – பொலிஸார் விசாரணை

Tuesday, March 29th, 2016

ஹட்டன் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவில் நோர்வூட் பாலத்திற்கு அருகாமையில் மிதந்து கொண்டிருந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் நேற்று (28) மாலை மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்றில் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: