வைத்திய சிகிச்சைக்கான உதவிக்கொடுப்பனவு அதிகரிப்பு – சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நலனோம்பு அமைச்சின் தகவல்படி!
Tuesday, November 29th, 2016
சமூக வலுவூட்டல் அமைச்சினால் நாடு தழுவிய ரீதியிலுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் சமுர்த்தி நிவாரண மேலதிக உதவிக் கொடுப்பனவிற்கு மேலதிகமாக மகப்பேற்று உதவிக்கொடுப்பனவு, கல்விக்கான கொடுப்பனவு, மரணத்தின் போதாக உதவிக்கொடுப்பனவு, வைத்திய சிகிச்சைக்கான உதவிக்கொடுப்பனவு என்பவற்றை வழங்கிவரும் நிலையில் வைத்திய சிகிச்சைக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக மேற்படி அமைச்சின் சுற்றுநிருபம் ஊடாக நாடு தழுவிய ரீதியிலுள்ள அனைத்து சமுர்த்தி அலுவலர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சமுர்த்தி நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பத் தலைவர், தலைவி உட்பட அவர்களது திருமணமாகாத பிள்ளைகள் அகியோர் அரசாங்க பொது வைத்தியசாலைகள் மற்றும் அரசாங்க ஆயுள்வேத வைத்தியசாலைகள் ஆகியவற்றில் தங்கியிருந்து சிகிச்சை பெறும்போது (கடந்த ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல்) நாளொன்றுக்கு 250ரூபா வீதம் 60 நாட்களுக்குள் 15 ஆயிரம் ரூபா உதவிக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த உதவிக் கொடுப்பனவைப் பெற ஆகக் குறைந்தது 5 நாட்களுக்கு மேல் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று இருக்க வேண்டும். உதவிக்கொடுப்பனவை பெறுவதற்கு சிகிச்சை பெற்ற வைத்தியசாலையின் வைத்தியரால் வழங்கப்பட்ட மருத்துவ சான்றிதழ் உட்பட சமுர்த்தி அலுவலரால் கேட்கப்படும் ஏனைய ஆவணங்களின் நிழற் பிரதிகளும் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:
|
|
|


