வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு – அமைச்சரவை அங்கீகாரம்!

Saturday, June 2nd, 2018

45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும் அவசியத்தை கருத்திற்கொண்டு விண்ணப்பித்த 45 வயதிற்கு உட்பட்ட அனைவரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் 5,000 பட்டதாரிகள் 2018 ஆம் ஆண்டு ஜீலை மாதத்திலும் 15,000 பட்டதாரிகளை 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திலும் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் அவர்களுக்கு ரூபா 20,000 கொடுப்பனவை மாதாந்தம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏனையோர் 2019 ஆண்டில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

அதனடிப்படையில் குறித்த பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் பின்னர் தகைமை பெறுகின்ற பட்டதாரிகளை அபிவிருத்தி அதிகாரிகள் யாப்பின் கீழ் காணப்படுகின்ற வெற்றிடங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: