வேடுவர் கலாசாரத்திற்கு மதிப்பளித்த நீதிமன்றம்!
Monday, January 2nd, 2017
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த வேடர் ஒருவர் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் (28) புதன்கிழமை கேடாரியுடன் ஆஜராகியிருந்தார்.
இந்த வேடர் தனது மகனின் வழக்கு தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
குறித்த வேடர் தனது பாரம்பரிய உடையுடன் தோளில் கோடாரியை சுமந்தவராக நீதிமன்றத்திற்குள் நுழைந்தார்.
நீதிமன்றத்திற்குள் நுழையும் போது நீதிமன்ற பிரதான நுழைவாயிலில் நின்ற பொலிஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற் கொண்ட பின்னர் அவரை பிரதான நுழைவாயிலில் தடுத்து நிறுத்தி பின்னர் நீதிமன்றத்திற்குள் சென்று அனுமதி பெற்ற பின்னர் குறித்த வேடரை நீதிமன்றத்திற்குள் செல்ல பொலிசார் அனுமதித்தனர்.
எனக்கு மிகவும் மகிழச்சியளிக்கின்றது. எங்களது வேடர் சமூகம் தனித்துவமாக சமூகமாகும். எமது தனித்துவத்தையும் எமது பாரம்பரியத்தையும் மதிக்கும் அனைவருக்கும் எமது நன்றிகள் என அந்த வேடர் குறிப்பிட்டார்.

Related posts:
|
|
|


