வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதியதில் குடும்பஸ்தர் உயிரிழப்பு: மகள் படுகாயம்
Monday, March 28th, 2016
இளவாலை பெரியவிளான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை( 27-03-2016) மாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளொன்று ஆலமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகள் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இளவாலைப் பொலிஸார் தெரிவித்தனர்.
பெரியவிளான் பகுதியைச் சேர்ந்த திரவியம் அகிலேஸ்வரன் (வயது -36) என்பவரே உயிரிழந்தவராவார்.அவரது மகளான அ .அகிலா (வயது -14) என்ற சிறுமி படுகாயமடைந்துள்ளார்.
நெஞ்சுவலியால் துடித்த மகளை மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றபோதே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
பிரதேச செயலர் பிரிவுகளில் மக்களுக்கான நடமாடும் சேவை!
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்!
சீனாவின் அன்பளிப்பிலான அத்தியாவசிய மருந்து பொருட்கள் தாங்கிய விமானம் நாட்டை வந்தடைந்தது!
|
|
|


