வெளிப் பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் உறுதிபடத் தெரிவிப்பு!
Saturday, February 26th, 2022
இலங்கை ஒருபோதும் வெளிப் பொறிமுறைகளை ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத் கொலம்பகே உள்நாட்டு பொறிமுறைகள் வெற்றியளித்தால் வெளி பொறிமுறைகள் தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வெளிப்பொறிமுறை என்பது ஐ.நா.சாசனத்திற்கு முரணாணது என தெரிவித்துள்ள அவர் இம்முறை இலங்கைக்கு எதிராக பிரகடனம் எதுவும் முன்வைக்கப்படாது என்றும் வாக்களிப்பு இடம்பெறாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையை மாத்திரம் சமர்ப்பிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கையில் என்ன இருக்கும் என்பது இலங்கைக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அதற்கு ஏற்ப இலங்கை பதிலளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை சமர்ப்பித்துள்ள விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து ஐநா அறிக்கையாளரின் அறிக்கை வந்ததும் தெரியவரும் எனவும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|
|


