135ஆவது சர்வதேச நாடாளுமன்ற சங்க அமர்வில் சபாநாயகர் பங்கேற்பு!

Friday, October 28th, 2016

ஜெனீவாவில் நேற்று(27)இடம் பெற்ற 135ஆவது சர்வதேச நாடாளுமன்ற சங்க அமர்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய பங்கேற்றுள்ளார்

சிரியாவின் அவசர நிலைமையை கருத்திற்கொண்டு இந்த அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டில் பங்கேற்கும் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவினரும் சர்வதேச நாடாளுமன்ற சபையின் செயலர் மார்டின் சுன்கொங்கை சந்தித்துள்ளனர்.

இதேவேளை, இந்த குழுவினர் ரஸ்யா, பூட்டான், மாலைதீவு,பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில், ரஸ்யா விடுத்த அழைப்புக்கு இணங்க இலங்கையின் நாடாளுமன்றக்குழு ஒன்று எதிர்வரும் 2017ஆம் ஆண்டு மார்ச்சில் ரஸ்யாவுக்கு செல்லவுள்ளதாகவும், பிரான்ஸின் நாடாளுமன்ற மற்றும் செனட் குழுக்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜெனீவா சென்றுள்ள இலங்கை குழுவில் கரு ஜெயசூரியவின் தலைமையில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, விஜித ஹேரத், ரோஹினிகுமாரி விஜேரட்ன, வேலுகுமார், தம்மிக்க தஸாநாயக்க உள்ளிட்டோர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tkn-09-02-rm-59-pgi-1

Related posts:

யாழ்.மாவட்டத்தினை நகர அபிவிருத்திக்காக நவீனமயப்படுத்தும் வகையில் உலக வங்கியின் நிதியுதவியுடன் அபிவிர...
வீதிச் சமிக்ஞை விளக்கு சிவப்பு நிறத்தில் எரிந்த போது நிற்காமல் சென்ற இரு இளைஞர்களுக்கு அபராதம்!
எரிபொருள் விலை உயர்வு - புகையிரதத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு –புகையிரத பெட்டிகளை அதிகரிக...