வெளிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்!

கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
கட்டாரில் இருந்த 26 பேரே இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாக இலங்கையர்களை திருப்பி அனுப்புவதை தற்காலிகமாக தாமதப்படுத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்மையில் வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கொரோனா தொற்று இன்னும் உச்ச நிலையை தொடவில்லை : உயிர்ப்பலிகள் வேகம் அதிகரிக்கும் - உலக சுகாதார நிறுவ...
மற்றுமொரு தடுப்பூசியை பயன்படுத்த WHO வின் அனுமதிக்காக காத்திருக்கும் இலங்கை!
பேராதனை போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைகள் இடைநிறுத்தம் - இந்திய வெளிவிவகார அமைச்சர் கவலை!
|
|