வெங்காய உற்பத்தித் துறையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி!

அனுராதபுரம் மாவட்டத்தில் கலன் பிந்துனுவெவ, கல்நேவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 3 விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்தித்துறையில் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சியை இலங்கையில் செயற்பட்டு வரும் சர்வதேச விவசாயிகள் தொடர்பான கொரிய நாட்டு நிறுவனமான கோபியா என்ற அமைப்பு வழங்கியுள்ளது.
கொரிய நாட்டு தொழில்நுட்ப முறைகளை உள்ளுர் வெங்காய உற்பத்தியாளர்களிடையே அறிமுகம் செய்து உள்ளுர் வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
இந்தக் கிராம மக்களுக்குத் தங்களது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகளை இந்த நிறுவனம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என நிறுவனத்தின் தலைவர் கலாநிதி சொய்யும் லீக் தெரிவித்துள்ளார்.
Related posts:
புதிய தேர்தல் சட்டம்: அரச பணியாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது - கூட்டு எதிர்கட்சி!
நாளையும் இரண்டே கால் மணிநேரம் மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பு!
வெப்பமான காலநிலை - நீர்ச்சத்து குறைபாடு மற்றும் உஷ்ண அலர்ச்சி ஏற்படும் அபாயம் - விசேட வைத்திய நிபுணர...
|
|