வீதியோரக் கடைகளை அகற்றுங்கள்!

கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நாளுக்கு நாள் வாகன விபத்துக்கள் அதிகமாகிவருகின்றன. அதற்கு ஒரு காரணமமாகவிருக்கின்ற வீதியோர அங்காடிக்கடைகளை அகற்றுமாறு கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
கல்முனை சாய்ந்தமருது காரைதீவு போன்ற பகுதிகளிலுள்ள சில அங்காடிக்கடைகளுக்கு கடிதங்கள் நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளன.விரைவாக கடைகள் அகற்றப்படவேண்டும் இன்றேல் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதம பொறியியலாளர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Related posts:
CSN நிறுவன அனுமதிப் பத்திரவிவகாரம்: விசாரணை ஒத்திவைப்பு!
வாழைப்பழத்தின் விலை குடாநாட்டில் திடீர் வீழ்ச்சி
தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண விசேட ஆய்வு - தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்...
|
|