வீதியில் வாகனங்கள் தரிப்பதால் கடும் போக்குவரத்து நெருக்கடி!
        
                    Monday, October 10th, 2016
            
மானிப்பாய் சுதுமலை சந்திக்கு அருகாமையில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் உள்ள சுதுமலை சற்திக்கு அருகாமையால் உள்ள பாரஊர்திகள் திருத்தும் நிலையம் ஒன்றில் திருத்த வேலைகளிற்காக வரும் பாரஊர்திகள் வீதியின் கிழக்குப் பக்கமாக உள்ள மதகிற்கு அருகாமையில் வீதியில் நிறுத்தப்பட்டு திருத்த வேலைகள் இடம்பெறுகின்றன. இதனால் இவ் வீதியில் பயணிப்பதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கவலை வெளியிட்டுள்ள மக்கள் உரியவர்கள் தலையிட்டு இப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts:
யாழ்ப்பாணத்தில் மீண்டும் வாள்வெட்டுக் குழு அட்டகாசம் – இருவர் வைத்தியசாலையில்!
யாழ்ப்பாணம் நடைபெற்ற தேர்தல் ஒத்திகை!
ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவிவகிக்கலாம் என்ற கட்டுப்பாட்டினை தொடர்ந்து தக்கவைக்கு...
| 
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                         | 
                    
  | 
                
            
        

