வீதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் சென்றது – அதிகாரிகள் மீது மக்கள் விசனம்!
Monday, January 14th, 2019
பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட 8 வீதிகளைப் புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட 5.8 மில்லியன் ரூபா நிதி அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்குக் காரணமாக திரும்பிச் சென்றதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த வருட இறுதியில் பிரதேச சபை வீதிகளை புனரமைக்கவென தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட நிதியில் நெசவுசாலை வீதி, சக்தி அம்மன் வீதி, திருவள்ளுவர் சனசமூக நிலைய வீதி, முருகன் கோவில் வீதி, முத்துமாரியம்மன் வீதி, மெதடிஸ்ற் நகர் வீதி, சாரைகிளி வீதி மற்றும் குமுதினிப் பிள்ளையார் வீதி உள்ளடக்கப்பட்ட போதும் எந்தவொரு வீதிகளுமே புனரமைக்கப்படவில்லை. இதற்கான காரணத்தை பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் வினவியபோது சில காரணங்களைக் கூறி குறித்த நிதி திரும்பிச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
எனவே இனிவரும் காலங்களிலாவது மக்கள் சேவை தொடர்பில் அதிகாரிகள் உரிய கவனம் எடுத்துச்செயற்பட வேண்டுமெனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related posts:
|
|
|


