வீட்டுத் திட்டம் குறித்து – ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கவும்!
Tuesday, January 15th, 2019
வலி. கிழக்கு கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் தகுதி இருந்தும் தமக்கான வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படவில்லையெனக் கருதுபவர்கள் எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் தமது ஆட்சேபனைக் கடிதங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ அல்லது செயலக முறைப்பாட்டுப் பெட்டியிலோ தெரிவிக்க முடியுமெனப் பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்:
இவ்வருடம் தமது பிரதேசத்துக்கு வழங்கவென வீடமைப்பு அமைச்சால் 550 வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இத் திட்டத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளைத் தமது கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் பார்வையிட முடியுமெனத் தெரிவித்தார்.
இத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் விபரம் தொடர்பில் குறித்த திகதிக்கு முன்னர் கிடைக்கும் முறைப்பாடுகளின் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் இதன்போது வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள் இறுதிப்பட்டியலாக அமையாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
|
|
|


