வீட்டில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளால் ஆபத்து – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, November 10th, 2020

கொரோனா தொற்று ஆரம்பத்தை கண்டுபிடிக்க முடியாத பலர் சமூகத்திற்குள் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு உயிரிழந்த பின் கண்டுபிடிக்கப்படுவர்களுக்கு எவ்வாறு கொரோனா தொற்றியதென்பது கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக உள்ளதென சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதனூடாக இதுவரையில் அடையாளம் காண முடியாமல் நோயாளிகள் பலர் தொடர்ந்தும் வீட்டில் உள்ளமை உறுதியாகியுள்ளது.

அத்துடன் கொரோனா இதுவரையில் சமூகமயமாகியுள்ளதா இல்லையா என்பது தற்போது விவாத பொருளாகியுள்ளது. எனினும் சமூக மயமாகவில்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு - குணமானோரின் எண்ணிக்கையும் 1057 ஆக அதிகரிப்பு – சுகாதார ...
போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கு மக்கள் ஆதரவு வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சுட்டிக்காட்ட...
சீரற்ற வானிலை எதிர்வரும் நாட்களில் குறைவடையும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறுல்’!