வீட்டிலிருந்த யுவதி மீது தாக்குதல்!

நாவாந்துறை கண்ணாபுரம் பகுதியில் வீட்டிலிருந்த யுவதி மீது 8பேர் சேர்ந்து தாக்கியதில் காயங்களுக்குள்ளான யுவதி யாழ்.போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் 29 வயதுடைய யுவதி ஒருவரே காயமடைந்தவராவார். திங்கட்கிழமை காலை மேற்படி யுவதியின் வீட்டிற்குச் சென்ற 8பேர் யுவதி மீது கல்லாலும் கையாலும் தாக்கியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் 8பேரின் பெயர்களை பொலிஸாருக்கு வழங்கியுள்ளார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தொழில் திணைக்கம் விடுத்துள...
குறிகாட்டுவான் இறங்குதுறை வலுவிழப்பு - கனரக வாகனங்கள் பயணிப்பது ஒரு வாரத்துக்கு இடைநிறுத்தப்பட்டுள்ள...
ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கப்படவிருந்த 1,989 மில்லியன் ரூபா மாத இறுதிக்குள் வழங்கப்படும் - அமைச்சர் ...
|
|