விவாதம் நடத்துவதில் சட்ட சிக்கல்கள் கிடையாது – தினேஸ்குணவர்த்தனா !
Tuesday, January 24th, 2017
பிணைமுறி மோசடி தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடத்துவதில் சட்ட சிக்கல்கள் கிடையாது என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விவாதம் குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
விவாதத்தை மாற்றியமைப்பதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.திட்டமிட்டவாறு இன்று விவாதம் நடத்தப்பட வேண்டும். இது தொடர்பில் ஏற்கனவே கட்சித் தலைவர்கள் இணங்கியுள்ளனர். ஆளும் கட்சியும் இது தொடர்பில் இணங்கியுள்ளது.
ஏற்கனவே திகதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட காரணத்தினால்தான் சபாநாயகர் இன்று காலை முதல் நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்த தீர்மானித்துள்ளார். எனவே பிணைமுறி மோசடிகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் நடாத்த எவ்வித சட்ட சிக்கல்களும் கிடையாது என தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts:
எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது - அமைச்சர் மஹிந்த சமரசிங்க...
யாழ்ப்பாணத்தில் மாறுபட்ட காலநிலை!
வாடகைக் குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்ட முறை - பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகார...
|
|
|


