விளையாட்டுக் கல்வி துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை – ஹங்கேரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்!

விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவிக்கும் முகமாக இலங்கை அரசாங்கத்துக்கும் ஹங்கேரி அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட முன்மொழியப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. குறித்த ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி, விளையாட்டு மற்றும் விளையாட்டுக் கல்வி போன்ற துறைகளை ஊக்குவித்து இருதரப்பினர்களுக்கிடையில் ஒத்துழைப்புக்களை விருத்தி செய்வதற்கும், வலுப்படுத்துவதற்காக இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை அகதிக்கு நஷ்டஈடு!
விதி மீறிய சாரதியின் விபத்தால் இறந்தவர் பேரில் ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
மத்திய வங்கி ஆளுநரின் உடனடி தீர்வை எதிர்ப்பார்கும் இறக்குமதியாளர்கள்!
|
|