வியாபார முகாமைத்துவப் பட்டப் படிப்புக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு நேர்முகப் பரீட்சை!
Wednesday, March 22nd, 2017
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தால் நடத்தப்படும் வியாபார முகாமைத்துவப் பட்டப் படிப்புக்கான தெரிவுப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் நேர்முகப் பரீட்சை நடைபெறவுள்ளது.
நேர்முகப் பரீட்சை காலை-09 மணி முதல் நிலைய மண்டபத்தில் இடம்பெறும்.
நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டோருக்கான கடிதம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடிதம் கிடைக்கப் பெறாதோர் எதிர்வரும்-28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொலைக்கல்வி நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
Related posts:
தோட்ட தொழிலாளர்கள் பணிபகிஷ்கரிப்பு!
புலிகளுடனான யுத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுமாறு இலங்கையிடம் ஆப்கானிஸ்தான் கோரிக்கை!
இரண்டு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டவர்கள் மாத்திரமே, வியாபார நிலையங்கள், சந்தைகளில் கடமையாற்ற முடியும் – ...
|
|
|


