விமான நிலைய செயற்பாடுகளுக்கு பாதிப்பு இல்லை!
Friday, September 9th, 2016
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் எந்தவித இடையூறுகளும் இன்றி இடம்பெறுவதாக விமான நிலைய செயற்பாட்டு தெரிவித்தள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
வழமை போன்று நாளாந்த விமான போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறுவதாக அத தெரணவிடம் அவர் கூறினார். இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் மேலதிக வேலைகளில் இருந்து தவிர்ந்து கொள்வதற்கு தீர்மானித்துள்ளார்கள்.
விமானிகள் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற பொதுவான விசாரணை சாதாரண முறையில் இடம்பெறக் கூடியதல்ல என்பதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் அமைப்பு கூறியுள்ளது.
அவர்களின் அந்த தீர்மானம், மது போதையில் இருந்ததாக குற்றம் சாட்டப்படும் விமானி தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணை அல்ல என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
எதாவது குற்றம் சுமத்தப்பட்டுள்ள விமானி ஒருவர் தொடர்பிலும் சரியான விசாரணை மேற்கொள்ள பயிற்றப்பட்ட அதிகாரிகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் இலங்கை விமான நிறுவனத்தில் 10%-15% வீதமான அளவு விமானிகளின் தட்டுப்பாடு இருப்பதாகவும் இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் அமைப்பு கூறியுள்ளது.

Related posts:
|
|
|


