23மில்லியன் ரூபா நிதியில் 16 வாய்கால்கள் புனரமைப்பு!

Tuesday, November 29th, 2016

யாழ்.மாவட்டத்தின் கமநல சேவை அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக 23 மில்லியன் ரூபா செலவில் 16 வாய்க்கால்கள் புனரமைக்கப்படுகின்றன என்று கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ்.மாவட்ட உதவி ஆணையாளர் இரத்தின குமார் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் கிடைக்கப்பெற்ற நிதியிலிருந்து விவசாயத்தின் தேவைப்பாட்டுக்கு அமைய 11 சேவை நிலையங்களின் கீழ்வரும் வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த வருடத்திற்கான திணைக்கள நிதியிலிருந்து இந்த 16 வாய்க்கால்களும் புனரமைக்கப்படுகின்றன. அவற்றில் 80வீதமான வெலைகள் தற்பொது முடிவுறுத்தப்பட்டுள்ளது. புலோலி கமநல சேவை நிலையம் ஊடாக முகாவில் மைக்கிறான் வாய்க்கால், கரவெட்டியில் தூவளி, அந்திரான், மற்றும் மித்தில் வாய்க்கால் என்பன புனரமைக்கப்பட்டுள்ளன. சாவகச்சேரி சேவை நிலையம் ஊடாக விளைவேலி அம்பலான்துறை, எழுதுமட்டுவாழ், நாகர் கோவில் வாய்க்கால், மற்றும் மாசேரி வாய்க்கால்களும் அம்பன் சேவையூடாக ஓவாளி வாய்க்காலும் புனரமைக்கப்பட்டு வருகின்றன. வேலணை கமநல சேவை நலையம் ஊடாக அறவயல் கன்னாவோடை வாய்க்காலும் உடுவில் நேவை நிலையம் ஊடாக சிலம்பாய் உடுவில் வாய்க்காலும் கீரிமழை கமநல சேவை நிலையம் ஊடாக பீதலிவாய்க்காலும் புனரமைக்கப்படுகின்றன. தொல்புரத்தில் பொன்னாலை கலங்கரை வாய்க்கால்கள, உரும்பிராய் நிலையம் ஊடாக வாய்க்கால் தரவை நல்லூரில் அரியாலை கிழக்கு வாய்க்கால, சண்டிலிப்பாய் கமநல சேவை நிலையத்தின் ஊடாக சில்லாலை தும்பளபாய் வாய்க்கால் என்பன புனரமைக்கப்பட்டு வருகின்றன.

unnamed (7)

Related posts: