விமானிகளின் போராட்டம் இன்றும் தொடர்கிறது!
Saturday, September 10th, 2016
இலங்கை விமான நிறுவனத்தின் விமானிகள் ஆரம்பித்துள்ள மேலதிக வேலை தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து இன்றும் இடம்பெறுவதாக விமானிகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட விமானியை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் வரை இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப் போவதாக அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தேரிவித்துள்ளார்.. எவ்வாறாயினும் இலங்கை விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த விமானியின் பணி இடைநிறுத்தமானது, விமான சேவை சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே விமானிகள் சங்கத்தின் கோரிக்கையை நிராகரிப்பதாக இலங்கை விமான நிறுவனம் கூறியுள்ளது. குறித்த விமானி தொடர்பான ஒழுக்காற்று விசாரணை எதிர்வரும் 27ம் திகதி நிறைவடையவுள்ளதுடன், அதனடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை விமான நிறுவனம் கூறியுள்ளது.

Related posts:
|
|
|


