மின் கட்டண சலுகைகளுக்கு தகுதியானவர்களை இனங்காண அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Friday, August 12th, 2022

அதிகரித்துள்ள மின்சார கட்டணத்தை செலுத்துவதில் சலுகைகளுக்கு தகுதியான குழுக்களுக்கு சலுகைகளை வழங்குவது தொடர்பில் தற்போது அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் பெற வேண்டிய குழுக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மின்சார கட்டணம் தொடர்பாக சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதன் ஊடாக இலங்கை மின்சார சபையின் வருமானம் மாதாந்தம் 50,000 கோடி ரூபாவினால் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்பொழுது இலங்கை மின்சார சபை மாதாந்தம் 60000 கோடி ரூபா வரையில் நட்டமடைந்து வருகின்றது.

தனியார் டீசல் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சாரம் பெற்றுக் கொள்வது உள்ளிட்ட காரணிகளினால் ஆண்டு தோறும் மின்சார சபை அடையும் நட்டம் அதிகரித்துச் செல்கின்றது.

இதேவேளை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மின்சாரக் கட்டணங்களை செலுத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்நோக்குவர் என தெரிவிக்கப்படுகின்றது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பு கைத்தொழில்துறை மற்றும் வர்த்தகதுறை போன்றவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட பணியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


நாட்டில் அராஜகம் செய்யும் குழுக்களுக்கு கடும் நடவடிக்கை – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
பகட்டு மேனிக்கு பாதீட்டை எதிர்கிறாரா கஜேந்திர குமார்? – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்...
நாட்டில் நிலவும் வரட்சியான நிலை இன்றிலிருந்து மாற்றம் - கிழக்கு, வடக்கு மாகாணங்களில் மழை பெய்யும் என...