வித்தியாவின் தாயை மிரட்டியவரது விளக்கமறியல் நீடிப்பு!

Monday, August 22nd, 2016

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் தாயாரை மிரட்டினார் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள பெண்ணின் விளக்கமறியல் 29ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் இன்று (22) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள பெண் மன்றில் ஆஜர்செய்யப்பட்டார். கடந்த வழக்கு தவணையின் போது சமர்ப்பிக்கப்பட்ட எழுது மூல பிணை விண்ணப்பம் தொடர்பில் அடுத்த வழக்கு தவணையின் போது கட்டளை பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதவான் வழக்கினை 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts:


சம்பந்தன் தனி நாட்டுக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது - வாசுதேவ நாணயக்கா...
அனுமதிக்கப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலன்களை மாத்திரம் சந்தைக்கு விநியோகிக்லாம் - லிட்ரோ - லாஃப்ஸ் கேஸ...
மூன்று வேளை உணவை வழங்க நடவடிக்கை - அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!