விதி மீறிய சாரதிகளுக்கு தண்டம்!
Friday, October 28th, 2016
இருள் சூழ்ந்த பின்னரும் வாகனத்தின் பிரதான விளக்கை எரியவிடாமல் வாகனத்தை செலுத்திய சாரதிக்கு 3ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது சாவகச்சேரி நீதிமன்று.
மாலை வேளையில் வாகனத்தின் பிரதான விளக்குகளை எரியவிடாமல் வீதியில் சென்ற வாகனத்தை தடுத்த போக்குவரத்துப் பொலிஸார் சாரதிக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று மன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. விசாரணையின் போது குற்றவாளி குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நீதிவான் சாரதிக்கு 3ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார். சாரதிய அனுமதிப் பத்திரம் மற்றும் காப்புறுதிப் பத்திரம் ஆகியவையின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு 13ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. பொலிஸார் நிறுத்துமாறு சமிஞ்சை செய்தபோதும் நிறுத்தாமல் ஆபத்தை விளைவிக்கக்கூடிய வகையில் வாகனத்தைச் செலுத்திய சாரதிக்கு 6ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்படட்டது.

Related posts:
|
|
|


