விசுவமடு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளிக்கு புதிய கட்டடம் கையளிப்பு!

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி விசுவமடு தென்னிந்திய திருச்சபை முன்பள்ளிக்கு புதிய கட்டடம் கையளிக்கப்பட்டது.
விசுவமடு பகுதியில் குறித்த திருச்சபையினால் நீண்ட காலமாக பாலர் பாடசாலை இயக்கப்பட்டு வந்த நிலையில் யுத்தம் காரணமாக சேதமடைந்திருந்தது.
இந்நிலையில் குறித்த சிறார்களின் நலன் கருதி தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தினால் புதிதாக நிர்மானிக்கப்பட்ட குறித்த முன்பள்ளி இன்று மாணவர் பாவனைக்கு கையளிக்கப்பட்டது, குறித்த நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தென்னிந்திய திருச்சபையின் பேராஜர் அதி வண கலாநிதி டானியல் செ.தியாகராஜா, நிறைவாழ்வு மைய இயங்குனர் தயாளினி தியாகராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது குறிதத் கட்டடத்தினை நிறைவாழ்வு மையத்துடன் இணைந்து பணியாற்றும் வெளிநாட்டவரான டொக்டர் டமரிஸ் லுதி அவர்கள் திறந்து வைத்தார்.
டொக்டர் டமரிஸ் லுதி அவர்களின் உதவியுடன் பல்வேறு பணிகள் தென்னிந்திய திருச்சபை நிறைவாழ்வு மையத்தின் ஊடாக முன்னெடுத்து செல்லப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும். குறித்த நிகழ்வினை தொடர்பிந்து சிறுவர் தின நிகழ்வுகள் இடம்பெற்றன. பிதிய கட்டடம் கிடைத்தமையை அடுத்து முன்பள்ளி சிறார்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தமை குறிப்பிடதக்கது.
Related posts:
|
|