விசாரணைகள் தீவிரம்!

Friday, August 5th, 2016

காணாமல் போனவரை மீட்டுத் தருவதாக கூறி பணம் பெற்ற நபர், உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக பிரேத பரிசோதணை அறிக்கை மற்றும் முறைப்பாட்டாளருடைய வாக்குமூலங்களைக் கொண்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் போனவரை மீட்டுத் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்த நபர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை யாழ்.நகரப் பகுதியில் வைத்து பொது மக்களால் பிடிக்கப்பட்டு யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

எனினும், சந்தேகநபர் மீது கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததன் காரணமாக அவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில், சந்தேககபர் ஒரு வகை திரவத்தை அருந்தி உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் என பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கசர் குறிப்பிடுகையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக சடலத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையின் தகவல்களைக் கொண்டும், முறைப்பாட்டாளரின் முறைப்பாடுகளைக் கொண்டும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இருப்பினும் குறித்த நபர் தனது பையில் இருந்து எடுத்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தினையே குடித்தார். அதனாலேயே அவர் உயிரிழந்திருந்தார். இதனால் இச்சம்பவம் தொடர்பாக யாரைக் கைது செய்வது என்பது தெரியவில்லை. இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: