வாள்வெட்டுக் குழுவை அடக்கத் தனிக் குழு!
Saturday, October 28th, 2017
வாள்வெட்டுக் குழுக்களைக் கைது செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது நேற்றுமுன்தினம் தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
வடக்கில் தற்போது இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் அவரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 10 க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொண்டு இந்தப் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் வாள்வெட்டு, முகமூடிக் கொள்ளை, அடாவடிகளில் ஈடுபடுவோரை இந்தக் குழு தேடித் தேடிக் கைது செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார். அண்மைக்காலமாக யாழ்.குடாநாட்டில் மேற் குறித்த குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுனியாவில் வர்த்தகநிலையம் தீப்பற்றியது!
தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டம்: நாட்டிலுள்ள 22 மில்லியன் மக்களின் தரவுகள் பாதுகாக்கப்படும் - நீதிய...
2020 க.பொ.த சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கான விசேட அறிவித்தல்!
|
|
|


