வாகனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பான விபரம் வெளியானது!
Friday, November 11th, 2016
ஆயிரத்துக்கும் குறைவான எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட சிறிய ரக கார்கள், 2 இலட்சம் ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1,800 முதல் 2,000 எஞ்ஜின் திறன் கொள்ளளவு கொண்ட வாகனங்கள் 9 இலட்சம் ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய மேற்படி இறக்குமதியாளர்கள், இது, ஹைப்ரிட் வாகனங்களில் தாக்கம் செலுத்தப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அனைத்து விதமான வான்களும், இரண்டு இலட்சம் ரூபாயினால் குறைவடையவுள்ளதாகவும். இந்த விலைக் குறைப்பானது, பெட்ரோல் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மாத்திரமே பொருந்தம் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசலில் இயங்கும் வான்களுக்கு, இந்த விலைக்குறைப்பு இல்லை. இதேவேளை, க்ரூ கெப் ரக வாகனங்களின் விலைகளும் குறைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக, வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்தள்ளனர்
.
Related posts:
|
|
|


