வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு!
Monday, August 29th, 2016
வவுனியா ஆசிகுளம், மயிலங்குளம் பகுதியில் 3 கிலோகிராம் எடை கொண்ட கிளைமோர் ஒன்றும் இரு கைக்குண்டுகளும் வவுனியா பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மயிலங்குளம் பகுதியில் வசிக்கும் நபர், தனது காணியை துப்புரவு செய்த போது மண்ணில் புதையண்ட நிலையில் கிளைமோர் மற்றும் கைக்குண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், அவற்றை மீட்டுள்ளனர். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இந்த வெடிபொருட்கள் மண்ணில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் குண்டுகளை செயழிலக்கச் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related posts:
வெளிநாடுகளிலிருந்து மேலும் 745 இலங்கையர்கள் இன்றும் நாட்டிற்கு வந்தனர்!
இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையுடன் வளமான எதிர்காலத்தை நோக்கிய எமது பயணம், பசுமை விவசாயத்தை அடிப்பட...
ஐக்கிய இராச்சியத்தால் இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டம் முன்னெடுப்பு - கொழும்பில் உள்ள பிரித்தானிய ...
|
|
|


