வவுனியாவில் ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் – திலீபன் எம்.பியின் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரமாண்டமான ஆதரவு பேரணி!
Monday, September 2nd, 2024
ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் பிரச்சாரக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வரும் நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து ஏட்டிக்குபோட்டியாக இரண்டு பேரணிகள் இடம்பெற்றிருந்தது.
வவுனியா குடியிருப்பு சித்தி விநாயகர் ஆலய பகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபனின் ஆதரவாளர்கள் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் வைரவபுளியங்குளம் மைதானத்தை நோக்கி பேரணியாக சென்றடைந்தனர்.
குறித்த கூட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்
இதேவேளை சம நேரத்தில் குருமண்காட்டில் இருந்து இராஜாங்க அமைச்சர் கே.கே. மஸ்தானின் ஆதரவாளர்கள் பேரணியாக ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டம் இடம்பெறும் வைரவளியங்குளம் மைதானத்தை சென்றடைந்திருந்தனர்.
000
Related posts:
ஓய்வு பெற்ற கடற்படை தளபதி சின்னையாவிற்கு உயர்வு பதவி!
பங்களாதேஷின் 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்த இலங்கைக்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம்!
பிரசார பணிகளின் போது, வாக்காளருக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச தொகையை நிர்ணயித்து வெளியானது அதிவிசேட வ...
|
|
|


