வழித்தட அனுமதியில்லாத பேருந்துக்கு அபராதம்!
Wednesday, September 7th, 2016
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வழித்தட அனுமதியின்றி, யாழ்ப்பாணம் – கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஒன்றின் உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம். விதித்து சாவகச்சேரி நீதவான் நீதமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் செவ்வாய்க்கிழமை (06) உத்தரவிட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றுக்கொண்டிருந்த மேற்படி பேருந்தை, நுணாவில் பகுதியில் வைத்து, சாவகச்சேரி பொலிஸார் சோதனை செய்தனர். இதன்போது, பேருந்துக்கு வழித்தட அனுமதி இல்லை என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த பேருந்தில் பயணித்த பயணிகள் வேறு பேருகளில் மாற்றி ஏற்றி அனுப்பி வைத்த சாவகச்சேரி பொலிஸார், பேருந்தை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்று பேருந்து உரிமையாளருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

Related posts:
நாட்டில் தமிழ் மொழியில் திரைப்படங்கள் நாடகங்கள் தயாரிக்கப்படுவது மிகவும் குறைவு - நாடாளுமன்ற உறுப்பி...
வாகன வருமான அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு!
பொதுமக்களால் அரச நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் செயற்பாட்டை நெறிப்படுத்...
|
|
|


