வல்வெட்டித்துறையில் கால்பந்தாட்ட போட்டியின்போது ஆதரவாளர்களிடையே மோதல் – பலர் காயம் ! ஒருவர் வைத்தியசாலையில்!!

Tuesday, October 18th, 2016

வடமராட்சியில் நேற்று மாலை இடம்பெற்ற வடக்கு மாகாண கால்பந்தாட்ட போட்டியில் இரு அணி ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட மோதலால் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கம்பர் மலையைச் சார்ந்த மார்க்கண்டு சசிகுமார் (வயது-37) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். வல்வெட்டித்துறை நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வடக்கு மாகாண கால்பந்தாட்ட போட்டியில் நாவாந்துறை சென்.மேரிஸ் அணியினரும், ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தினரும் கலந்து கொண்டிருந்தனர்.

போட்டி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இரு அணிகளும் 1:1 என்ற கோல்களை அடித்து சமநிலையில் இருந்தனர். இரு அணிகளும் கோல்களை அடிக்கும்போதே அந்த அணிகளினுடைய ஆதரவாளர்கள் மைதானத்திற்குள் இறங்கி ஆரவாரித்தார்கள். போட்டி நிறைவுபெறும் தறுவாய் வரை இரண்டு அணிகளும் 1:1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தனர்.

போட்டி நிறைவடையம் போது நாவாந்துறை சென்.மேரிஸ் அணியினர் மேலதிகமாக ஒரு கோலை அடித்து 2:1 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர். இதனால் அந்த அணியின் ஆதரவாளர்கள் மீண்டும் மைதானத்திற்குள் இறங்கி ஆரவாரித்தனர். இதன்போதே இரு அணிகளைச் சேர்ந்த ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு அணிகளையும் சேர்ந்த 20ற்கம் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

போத்தல்கள், கொட்டன்களால் ஒருவரை ஒருவர் தாக்கினார். மோதலின் போது சென்.மேரிஸ் அணியினருடைய ஜே.சிகள் கிழிக்கப்பட்டு, தீவைக்கப்பட்டன. நீண்ட நேரத்தின் பின்னர் வல்வெட்டித்தறைப் பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினார். இதன்போது தலையில் படுகாயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

நாவாந்துறை சென்.மேரிஸ் அணியினரை பாதுகாப்பான முறையில் பொலிஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர். மோதல் இடம்பெற்றதால் அந்தப் பகுதியில் நீண்டநேரம் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. சம்பவத்தையடுத்து வடக்கு மாகாண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

201606212100076558_Two-groups-conflict-in-uthamapalayam_SECVPF

Related posts: