கனரக வாகனங்களை செலுத்துவதற்கான பயிற்சிக்கு யாழில் இருந்து 15 இளைஞர்கள் தெரிவு!

Wednesday, July 18th, 2018

யாழ் மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அருணலு 2018 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் முதற்கட்டமாக 15 இளைஞர்கள் கனரக வாகனங்களைச் செலுத்துவதற்கான பயிற்சிநெறியில் பங்குகொள்வதற்காக நேற்று திங்கட்கிழமை குருநாகலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இப்பயிற்சி நெறி இல 549 கண்டி வீதி மாவத்தா குருநாகலில் அமைந்துள்ள ஹரெக் லங்கா சர்வதேச தொழில் மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இப் பயிற்சியாளர்களுக்கு ஒரு மாத காலம் தங்குமிடத்துடன் கூடிய பயிற்சியுடன் Nஏஞ 111 தரச் சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் இப்பயிற்சியில் உடுவில், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்து தலா 4 பேரும் சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்து தலா ஒருவரும் மருதங்கேணி, ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவுகளிலிருந்து தலா இருவரும் கலந்துகொள்ளச் சென்றுள்ளார்கள்.

மேலும் இப்பயிற்சி நெறியில் கலந்துகொள்ளும் இளைஞர்களை நேற்றுக் காலை 8 மணியளவில் யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கப் பகுதியில் இருந்த ஹரெக் லங்கா நிறுவனத்தினர் அழைத்துச் செல்வதற்கான பயண ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

Related posts: