வலி.தென்மேற்கு கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் மீண்டும் ஆரம்பம்!
Thursday, October 20th, 2016
வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் 5 மாதங்களின் பின்னர் தற்காலிகமான ஓர் இடத்தில் மீள உருவாக்கப்பட்டுள்ளது என்று சண்டிலிப்பாய் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கப் புதிய தலைவர் தெரிவித்தள்ளார்.
வலி.தென்மேற்கு உதவிப் பிரதேச செயலர் திருமதி நேசரட்ணம் செல்வகுமாரி தலைமையில் அண்மையில் நடைபெற்ற மீன்பிடி, விவசாயம், கால்நடை வளர்ப்பு தொடர்பான அபிவிருத்திக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த 5 மாதங்களுக்கு மேலாக சண்டிலிப்பாய் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் மூடப்பட்டிருந்தது. கடந்த ஜப்பசி மாதம் 1ஆம் திகதி முதல் கூட்டுறவு அபிவிருத்தி உதவி அணையாளர் பொ.மோகன் தலைமையில் உருவாக்கப்பட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் மீள இயங்குவதற்கு ஆரம்ப கட்ட மானிய நிதியாக 1 மில்லியன் ரூபா வழங்க முன்வரவேண்டும். – என்று அவர் தெரிவித்தார். கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தை மீள இயங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சண்டிலிப்பாய் உதவிப் பிரதேச செயலர் தெரிவித்தார்.

Related posts:
|
|
|


