அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்லவும் – பொதுமக்களிடம் சுகாதார துறையினர் கோரிக்கை!

Monday, October 19th, 2020

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் செல்லுமாறு சுகாதார துறையினர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதால், நபர்கள் ஒன்றுக் கூடும் இடங்களுக்கு செல்வதை முடிந்த வரையில் குறைத்துக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஹேமந்த ஹேரத் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை அரச நிறுவனங்களில் அத்தியவசிய சேவைகளை மாத்திரம் வழங்கி, மக்கள் ஒன்றுக்கூடுவதை தவிர்க்குமாறு அரச சேவைகள், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மறு அறிவித்தல் விடுக்கும் வரை அரச நிறுவனங்களில் பொது மக்கள் தினத்தை நடத்த வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: