வலி.தென்மேற்கில் டெங்கு தாக்கம் – சடுதியாக அதிகரிப்பு 1500 வீடுகள் சோதனை: 12பேருக்கு எதிராக வழக்கு!

Tuesday, December 13th, 2016

வலி.தென்மேற்கு பிரதேசத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஒரு வாரத்திற்குள் 32 ஆக இருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தற்போது 45ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி, நோயளர் இணங்காணப்பட்ட கிராமங்களிலுள்ள சுமார் 1500 வீடுகளில் சோதனை நடத்தியதுடன் 12 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளார்.

கடந்த வாரம் பெய்த பருவமழையைத் தொடர்ந்து குடாநாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளது. வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் ஆனைக்கோட்டை, நவாலி, சுதுமலை, மானிப்பாய் ஆகிய கிராமங்களில் கடந்த வாரம் 32 டெங்கு நோயாளர் இணங்காணப்பட்டு யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் மேலும் 13 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதையடுத்து சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி செல்வி சிந்துஜா தலைமையில் சென்ற பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், மருத்துவமாதர்கள், கிராம உத்திஆயாகத்தர்கள், பொலிஸார் ஆகியோர் இணைந்து டெங்கு நோயாளர் இனங்காணப்பட்டுள்ள மேற்படி கிராமங்களில் உள்ள சுமார் 1500 வீடுகளில் சோதனை நடத்தியுள்ளனர்.

இந் நடவடிக்கையின் போது 898 வீடுகளில் நுளம்புகள் உற்பத்தியாக்கக்கூடிய தடயப் பொருள்கள் இருந்தமையும், 137 வீடுகளில் குடம்பிகள் இருந்தமையையும் அவதானித்த சுகாதாரப் பரிசோதகர்கள் 12 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளனர். இதேவேளை நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி மூலம் பிரசாரம் செய்துவரும் சுகாதாரப் பரிசோதகர்கள் குறிப்பிட்ட இடங்களில் புகையூட்டலை மேற்கொண்டுள்ளனர். வீடு வீடாகச் சோதனையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கு சிவப்பு நோட்டீஸ் வழங்கி கால அவகாசமும் வழங்கி வருகின்றனர்.

 mosquito

Related posts: