வலயக் கல்வி  அலுவலகம் மூலம் தேர்தல் கொடுப்பனவை வழங்க பணிப்பு!

Wednesday, February 21st, 2018

நடைபெற்று முடிந்த உள்@ராட்சி சபைத் தேர்தல் கடமையில் ஈடுபட்ட ஆசிரியர், அதிபர்களுக்கான தேர்தல் கொடுப்பனவை வலயக் கல்வி அலுவலகம் மூலமாக வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு மாகாணக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கடமையில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்களுக்கான தேர்தல் கொடுப்பனவை மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் மூலமாகவழங்குமாறு தேர்தல்கள் திணைக்களம் அறிவித்திருந்தமை காரணமாக தேர்தல் கடமையில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர்.

இதனை நிவர்த்திக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள புதியசுற்றுநிருபம் குறித்து அதிபர், ஆசிரியர்கள் தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதுடன், தேர்தல் ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதேவேளை தேர்தல் பயிற்சி வகுப்புக்கள், காத்திருப்பு பட்டியலில் காணப்பட்ட அதிபர், ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மாவட்ட தேர்தல் அலுவலகங்கள் மூலமாகசெலுத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை உள்@ராட்சித் தேர்தல் கடமைகளில் 1,75,000 அரச உத்தியோகத்தர்கள்

ஈடுபடுத்தப்பட்ட போதும் 68,000 அதிபர், ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 2015 பொதுத் தேர்தல் கடமைக்கான கொடுப்பனவை விட இம்முறை இடம்பெற்ற தேர்தல் கொடுப்பனவை தேர்தல்கள் ஆணைக்குழு அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: