வறட்சியிலிருந்து மீளும் அளவுக்கு மழைவீழ்ச்சி இல்லை!
Monday, January 23rd, 2017
நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்துள்ளது. இருப்பினும் வறட்சியிலிருந்து மீளும் அளவுக்கு இந்த மழைவீழ்ச்சி போதுமாதல்ல என்று தேசிய அனர்த்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
வறட்சி காரணமாக தற்போது நாட்டில் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு;ள்ளனர். சில பிரதேசங்களில் மழை பெய்துள்ள போதிலும், அனர்த்த முகாமைத்துவ நிலையம் முன்னெடுக்கும் நிவாரண சேவை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பிரதீப் கொடிப்பிலி கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கூடுதலானோர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 66 ஆயிரத்து 757 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 329 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
இலங்கையைக் கடக்கும் விண்வெளி மையம்!
இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் - அமைச்சர் வீரசேகர உறுதி!
வாகன விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு - பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவிப்பு!
|
|