வர்த்தக நிலையங்களுக்கு 39ஆயிரம் ரூபா தண்டம்!

Tuesday, December 6th, 2016

காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 12 வியாபார நிலையங்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்குகளில் 39ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. என பாவனையாளர் அதிகார சபையின் யாழ்.மாவட்ட இணைப்பதிகாரி த.வசந்தசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலிப் பகுதியில் உள்ள வர்த்தன நிலையத்தில் யாழ்.மாவட்ட முகவர் மூலமாக விநியாகிக்கப்பட்ட மென்பான போத்தல்களில் சில போத்தல்களில் அதன் விற்பனை விலை, காலாவதி திகதி, உற்பத்தி விலை, தொகுதி இலக்கம் போன்றவை குறிக்கப்படவில்லை. அவை பாவனையாளர் அதிகார சபையினரால் கைப்பற்றப்பட்டன. அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், யாழ்.மாவட்ட முகவருக்கு எதிராகவும் யாழ்.நீதிவான் மன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது. பிரபல மன்பான உற்பத்தி நிறுவனம் மீது கடந்த வருடம் டிசம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்கானது 10 மாதங்களின் பின்பு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டதன் நிமித்தம் 40ஆயிரம் ரூபா தண்டம் விதித்து முகவருக்கு அதில் சம்பந்தமில்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் பல வழக்குகளில் சம்பந்தப்பட்ட வர்த்தகர்களுக்கு 39ஆயிரம் தண்டம் விதிக்கப்பட்டது குறிப்பித்தக்கது.

law12

Related posts: